Kogilavani / 2017 ஜூலை 13 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
தலவாக்கலை நகர், மக்கள் வங்கிக்கு அருகில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அவிஸ்ஸவாளையிலிருந்து நானுஓயாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியும் வட்டகொடையிலிருந்து தலவாக்கலைக்கு வந்த காரும், நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரே படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில், முச்சக்கர வண்டியின் சாரதியும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கார் சாரதியின் கவனக்குறைவே, இவ்விபத்துக்கு காரணமென தெரிவித்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
27 minute ago
38 minute ago