Kogilavani / 2017 ஒக்டோபர் 30 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை- பண்டாரவளை வீதி வழியாக பயணித்த முச்சக்கர வண்டி, ஹாலிஎல போகஹமடித்த பாலத்துக்கு அருகிலுள்ள பாரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இவ்விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் பெண்ணொருவரும் அவரது குழந்தைகள் இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago