Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 13 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொட்டகலை பகுதியில் நேற்று (12) மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் வாகன விபத்தினால் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞன், கல்லீரல் பாதிக்கப்பட்டு வயிற்றில் அதிக இரத்த ஓட்டம் ஏற்பட்டமை காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்திய நிபுணர் இனோகா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பலாங்கொடையைச் சேர்ந்த 30 வயதுடைய, நதிர சம்பத் எனவும் இவர், தலவாக்கலையில் மீன் சந்தையில் பணிபுரிந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குடாகம பிரதேசத்தில் தங்கியுள்ள தனது நண்பர்களை சந்திப்பதற்காக குறித்த இளைஞன், சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டொல்பின் வானில் சிக்கிய இளைஞனை, வானில் பயணித்தவர்கள் வெளியே எடுத்து, வீதி ஓரத்தில் போட்டு விட்டு தப்பிச் செல்கின்றமை, அருகில் உள்ள பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், வானின் சாரதியை கைதுசெய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த இளைஞனும் அதிகளவான மதுபோதையில் இருந்துள்ளமை பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
1 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago