2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 04 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தொடரும் கன மழை காரணமாக, நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீர்த்தேக்கத்துக்கு அண்மையில் வசிப்பவர்கள்  அவதானத்துடன் செயற்படுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 மலையகத்தில்  பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

மவுஸ்ஸாக்கலை, லக்ஷபான, கெனியன், கொத்மலை, மேல் கொத்மலை, நவ லக்ஷபான ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X