Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
R.Maheshwary / 2022 ஜூன் 19 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
குத்தகை நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்றுக்கொண்ட ட்ரக் வாகனத்து உரிய முறையில் குத்தகை செலுத்தாமை காரணமாக, அதனை மீண்டும் கொண்டுச் செல்ல வந்த குத்தகை நிறுவன கையாட்களிடமிருந்து அதனை மீட்க போராடிய வியாபாரி ஒருவர், அந்த வண்டியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வத்தேகம பகுதியில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பொல்கொல்ல- மிகமனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தமது வீட்டுக்கு முன்பாக சீமெந்து கல் தயாரிக்கும் வர்த்தகத்தை முன்னெடுத்து வந்ததுடன், கண்டி நகரிலுள்ள குத்தகை நிறுவனம் ஒன்றிலிருந்து ட்ரக் வண்டியொன்றையும் பெற்றுள்ளார்.
கொரோனா தொற்று பரவலால், குறித்த வண்டிக்கான குத்தகையை செலுத்த முடியாமல் போனதால், குத்தகை நிறுவன உரிமையாளருக்கும் இந்த வியாபாரிக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று (18) அதிகாலை இரண்டு மணியளவில், தமது வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக் வண்டியை யாரோ திருடுவது போன்று சத்தம் கேட்டுள்ளது.
இதனையடுத்து சிலர் தமது ட்ரக் வண்டியை எடுத்துச் செல்வதை கண்ட அவர் , பின்னால் ஓடிச் சென்று அதனைத் தடுத்த போது, தவறி ட்ரக் வண்டிக்குள் விழுந்து காயமடைந்து கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என வத்தேகம பொலிஸாஜர் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, குத்தகை நிறுவன உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், டரக் வண்டியை கடத்துவதற்கு வந்த நபர்களையும் அந்த ட்ரக் வண்டியையும் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago