Mithuna / 2024 பெப்ரவரி 15 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
பிதுருதலாகல மலைத்தொடரை சுற்றுலாப் பயணிகளுக்காக விரைவில் திறக்க வேண்டும் என மத்திய மாகாண ஆளுநரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான சட்டத்தரணி லலித்
யு.கமகே தெரிவித்துள்ளார் .
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் வைத்தே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "பிதுருதலாகல எமது நாட்டில் மிக உயர்ந்த மலை. இம்மலைத்தொடர் சுற்றுலாத்துறைக்கு அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கும் பிரதேசம் என்பதுடன், அதை இனி மூடப்படுவது பொருத்தமல்ல. எனவே அதனை பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் திறக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்"
மேலும் குழுக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான எஸ்.பி.திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ராமேஸ்வரன், வி.இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago