மொஹொமட் ஆஸிக் / 2020 ஜனவரி 28 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலையக விவசாயத்தையும் மக்களையும் வன விலங்குகளின் பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் அயராது உழைக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. டீ. லால்காந்த தெரிவித்தார்.
கண்டியில், இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையகத்தில், பன்றிகள், குரங்குகள், முள்ளம்பன்றிகள், சிறுத்தைகள், குளவிகள் காரணமாக, மக்களும் விவசாயமும் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதைத் தடுப்பதற்கு, ஆட்சியாளர்கள் எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கு, கண்டி, நகரை மய்யப்படுத்தி, ஆர்ப்பாட்டமொன்றையும் அறிவூட்டல் ஒன்றையும் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
5 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 hours ago
09 May 2026