Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
பொருட்களின் விலை உயர்வைக்கூட இந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த
முடியவில்லை. இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களும் விலையை தீர்மானிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
அப்படியானால் அரசாங்கம் எதற்கு, அமைச்சரவை எதற்கு என பாராளுமன்ற
உறுப்பினர் வே. இராகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். தலவாக்கலையில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர். மாகாணசபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்படும் என பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் என்பது ஜனநாயக அம்சம்.
எனவே, தேர்தல் நடைபெறுவதை நாம் வரவேற்கின்றோம். ஆதரவையும் வழங்குவோம்.
இந்தியாவின் அழுத்தத்தாலேயே தேர்தல் நடத்தப்படுகின்றது. ஆனாலும் அவ்வாறு இல்லை என வெளிவிவகார அமைச்சர் கூறுகின்றார். எம்மை பொறுத்தமட்டில் சர்வதேச அழுத்தத்தாலேயே தேர்தலுக்கான ஏற்பாடு இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை, முன்னரெல்லாம் வரவு - செலவுத் திட்டம்வரும்போதுதான் பொருட்களின் விலை
மறுசீரமைக்கப்படும். ஆனால் இன்று நாளாந்தம் அதிகரிப்பு இடம்பெறுகின்றது.
இறக்குமதியாளர்களும், உற்பத்தியாளர்களுமே விலையை நிர்ணயிக்கின்றனர். அப்படியானால் அரசாங்கம், அமைச்சரவை எதற்கு என்றார்.
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago