2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Janu   / 2024 ஜூன் 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

"கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்திற்காக பேராதெனிய பொருளியல்துறை பிரிவு பேராசிரியர் எஸ்.விஜயசந்நிரன் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையின்படி பெருந்தோட்ட தொழிலாளி ஒருவருக்கு 2321ரூபாய் நான்கு சதம் நாளாந்த  சம்பளம் வழங்கப்பட வேண்டும். தொழிலாளி ஒருவரின் குடும்பத்தில் நான்கு பேர் சராசரி நாளாந்த வாழ்க்கையை வாழ்வதற்கே இந்த தொகை சம்பளமாக வழங்கப்பட வேண்டும்." என கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் "வாழ்வதற்கான சம்பளம்" எனும் தொணியில் ஹட்டன் அஜந்தா வரவேற்ப்பு மண்டபத்தில் வியாழக்கிழமை (20) காலை நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கில் தெரிவித்தது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் (ISD) நிறைவேற்று பணிப்பாளர் பி.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் தொழிற்சங்க வாதிகள் அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகள் மற்றும் கல்வி மான்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் தெரிவித்துள்ளதாவது ,

பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பெனிகள் தொழிலாளர்களுக்கு ரூபாய் 1700 நாளாந்த சம்பளம் வழங்கியாக வேண்டும் என அரசாங்கம் மற்றும் இது தொடர்பில் பேச்சு நடத்திய தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தனர்.

இருந்த போதிலும் கடந்த வருடம் (ISD) நிறுவகத்தின் ஆலோசனைகளுக்கமைவாக நடாத்தப்பட்ட ஆய்வின்படி பெருத்தோட்ட தொழிலாளி ஒருவரின் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் நாளாந்த சராசரி வாழ்க்கையை கொண்டு செல்ல 2321 ரூபாய் நான்கு சதம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வழங்க கோரியுள்ள 1700 ரூபாய் நாளாந்த சம்பளம்  வாழ்க்கைக்கு போதிய சம்பளம் என கூற முடியாது.

அதேநேரத்தில் இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதக நிலையில் ஏற்றம் கண்டுள்ள அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வு, பாடசாலை மாணவர்களுக்கான கல்வி செலவு உள்ளிட்ட பல விடயங்களில் அதிகரித்துள்ள வாழ்க்கை சுமையில் இந்த 1700 ரூபாய் சம்பளம் சாத்தியமற்ற ஒன்றாகும்.

எனவே பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பெனிகள் இதனை கருத்தில் கொண்டு தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வாழ்வதற்கான சம்பளம் என்பதனை உணர்ந்து அதற்கான நடவடிக்கை எடுப்பது

காலத்தின் தேவை என இதன் போது தெரிவிக்கப்பட்டது.மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷட விரிவுரையாளர் எஸ்.விஜயசந்திரன் பெருந்தோட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வு அறிக்கை தொடர்பான  அண்மையில் நிறுவகதின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ். யோகேஸ்வரி ஏற்பாட்டில்  செயலமர்வு மற்றும் ஊடக சந்திப்பு கண்டியில் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X