2026 ஜனவரி 21, புதன்கிழமை

விழிப்புணர்வு பணிகள் ஆரம்பம்

Kogilavani   / 2021 மே 16 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள பெருந்தோட்டப் பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரிக்கலாம் என்று, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், நாளை (17) முதல், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, கொவிட் 19 பாதுகாப்பு செயலணியின் பிரதானி பிரஜாசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்கள், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள அவர், சுகாதார விதிமுறைகளை முறையாகப் பேணி நடக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றத் தவறினால் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்கள், பாரிய அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் சந்தர்ப்பத்தில், பிரஜாசக்தி நிறுவனம் முன்னின்று செயற்படும் எனவும் முக்கியமாக நாளை (17) முதல், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில், கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார பிரிவு மற்றும் பாதுகாப்புப் படையுடன் இணைந்து துரிதமாக முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X