Mayu / 2024 ஜூன் 09 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் உரிமை தொடர்பாகவும் , திருநங்கைகளுக்கும் சமூகத்தில் சம உரிமை வழங்க வேண்டுமெனவும் விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக (08) இடம்பெற்றது.
குறித்த வீதி நாடகத்தை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது பெண்கள் உடலியல், உளவியல் ரீதியாக எவ்வாறு துன்புறுத்தப்படுகிறார்கள், பெண்கள் எவ்வாறான சாதனைகளை புரிந்துள்ளார்கள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எவ்வாறு என்பன உள்ளிட்ட பல விழிப்புணர்வு விடயங்கள் இவ்வீதி நாடகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது மேலும் குறித்த நிகழ்வில் அதிகமான திருநங்கைகளும் பங்கேற்றிருந்தனர்.
மேலும், நாட்டின் பொருளாதாரத்திற்கு 200 வருட காலமாக பாரிய பங்களிப்பை வழங்கும் எமது சமூகமாக விளங்குகிறார்கள் இவர்களை இந்திய வம்சாவளியினர் என்று தெரிவிப்பதை விடுத்து இலங்கைத் தமிழர் அல்லது மலையக தமிழர் என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செ.திவாகரன்




22 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago