2026 மே 09, சனிக்கிழமை

dd

விவசாய ஆய்வு, உற்பத்தி உதவி அதிகாரிகள் 8 நாள்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

 

விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் சேவையாற்றும், இலங்கை விவசாய ஆய்வு, உற்பத்தி உதவி அதிகாரிகள் தொடர்ந்து 8 நாள்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.

இதன்பிரகாரம், நேற்று முன்தினம் (11) தொடக்கம், எதிர்வரும் 18ஆம் திகதி வரை, இவர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருப்பர் என, இலங்கை விவசாய ஆய்வு, உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் கமல் புஷ்பதிலக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடுபூராகவும் 8,000 பேர்,  தமது சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம், உற்பத்தி உதவி அதிகாரிகள், 340பேர் கடமையாற்றுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது சங்கத்தினருக்கு பதவியுயர்வு வழங்குதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் ​​தொடர்பில், விவசாய அபிவிருத்தி ஆணைக்குழுவின் தலைவருடன் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளதாகவும் இதுவரை எவ்விதத் தீர்வுகளும் எடுக்கப்படாமையாலேயே, பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு, எதிர்வரும் 18ஆம் திகதிக்குள் தீர்வு கிடைக்காவிடின். 18ஆம் திகதியிலிருந்து, கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .