2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

வீடு உடைத்தவரை பிடித்து கட்டிவைத்து ​கொடுத்தனர்

Freelancer   / 2023 மார்ச் 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

வீட்டை உடைத்து சொத்துக்களைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், பிரதான சந்தேகநபர் எனக்கூறப்படும் நபரை பிடித்து, கட்டிவைத்து பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம், வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர், பசறை பள்ளேகம பி​ரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு திங்கட்கிழமை (06) இரவு வந்து, பணம் கேட்டபோது, அவ்வீட்டில் இருந்தவர்கள் அவரை கையும் மெய்யுமாக பிடித்து, கட்டிவைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வெல்லவாய,மல்லன்தாவவ பிரதேசத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து  ஆடைகளைக் கழுவும் இயந்திரம், குளிரூட்டி இயந்திரம் உள்ளிட்டவற்றை கொள்ளையிட்ட மூவர் வழங்கிய தகவல்களின் பிரகாரமே பசறையைச் ​சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X