2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீட்டின் மீது மண்சரிவு ; சிறுமி படுகாயம்

Janu   / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹாலி எல பகுதியில்  உள்ள வீடொன்றின் மீது ஞாயிற்றுக்கிழமை (27)  ஏற்பட்ட மீது மண்சரிவில்  சிறுமியொருவர் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த பகுதியில் பெய்த கனமழையின் போது, ​​ஹாலி எல உடுவர, கிரவணா கொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது ஏற்பட்ட மண்சரிவில் காயமடைந்த சிறுமி,   சிகிச்சைக்காக  பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 மேலும், குறித்த வீட்டில் ஒரு படுக்கையறை கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 பாலித ஆரியவன்ச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .