2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீட்டு உரிமைப்பத்திரங்களை வழங்காமல் ஏமாற்றுகின்றனர்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 05 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ்வரி விஜயனந்தன்

மலையக மக்களின் வீடுகளுக்கான உறுதிப்பத்திரத்தை வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தி வீதிக்கு இறங்கியதாக   மலையக தோட்டத் தொழிலாளர்கள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பெ.முத்துலிங்கம் தெரிவித்தார்.

ஒக்டோபர் 3ஆம் திகதி உலக வாழ்விட தினமாகும். அன்றைய தினத்திலாவது எமது கோரிக்கை ஆட்சியாளர்களின் காதுகளுக்கு கேட்கவேண்டும். அதனை கருத்திக்கொண்டே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தோம் என்றார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் (3)   கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக மலையக மக்கள் இன்னமும் லயன் வீட்டு தொகுதிகளில் நான்கு, ஐந்து தலைமுறைகளாக வாழ்ந்து வரும் 1987 ஆம் ஆண்டு முதல் இன்று வரையில் 37,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்த அவர், அப்போதைய அரசாங்கங்களால் கடன் அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு கடனை செலுத்தி முடித்திருந்தாலும் அந்த வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை.

எனினும் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களால் சில தற்காலிக உறுதிப்பத்திரங்களை வழங்கியிருந்நதாலும் அவை நாட்டின் சட்டத்தின் பிரகாரம்  இலங்கை அளவையாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் அதனால் எந்த பயனும் இல்லை என்றார்.

நாட்டின் அபிவிருத்திக்காகவும், அந்நிய செலவாணிக்கும் பாரியளவில் பங்களிப்பு செய்யும் அம்மக்களுக்கு,முறையான வீட்டுத்திட்டங்கள், அல்லது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமல்  ​தொடர்ந்தும்  ஏமாற்றப்பட்டு வருகிறார்கள்.

எனவே, இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மூலமாக அழுத்தம் கொடுப்பதற்காகவே இன்று வீதிகளில் இறங்கி யுள்ளதாகத் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டத்தின் மூலம் எமக்கான அடிப்படைகள் தேவைகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதே எமது இலக்கு என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .