Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 டிசெம்பர் 12 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாமிமலையில் இருந்து மஸ்கெலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, பிரவுஸ்விக் பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வீடொன்றின் சுவரில் மோதியதில், வீட்டின் ஒரு பகுதியும் பேருந்தும் சேதமடைந்துள்ள சம்பவம் புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்ததாகவும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரே வந்த பேருந்துக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்தின் முன்பகுதி பலத்த சத்தத்துடன் வீதியை விட்டு விழகி வீட்டின் சுவரில் மோதியதாக குறித்த பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .