Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகம் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து பெருந்தோட்ட மக்களுக்கு வீட்டுரிமையை வழங்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாளை தினம்(3) கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரித்தானியாரால் 150 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட லயன் அறைகளிலேயே பெரும்பான்மையான பெருந்தோட்ட குடும்பங்கள் இன்னமும் வாழ்ந்து வரும் நிலையில், சிவில் சமூகம் வீட்டுரிமை பிரச்சினையை அவ்வப்போது ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்த போதும் இந்த அடிப்படை உரிமை பிரச்சினை இதுவரை தீர்க்கப்படவில்லை.
1987ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்தடுத்து ஆட்சி பொறுப்பில் இருந்த அரசாங்கங்கள் வெளிநாட்டு உதவிகளால் பெருந்தோட்டங்களில் அவ்வப்போது தனி வீடுகளைக் கட்டி கடன் அடிப்படையில் 37,000 வீடுகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளன. இவ்வீடுகளுக்கான கடன்கள் திருப்பி செலுத்தப்பட்டுள்ள போதிலும் வீட்டு உரிமையாளர்களுக்கு உரிமைப் பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
எனவே மலையகத்தில் உள்ள 37,000 வீடுகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குமாறு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் பொதுமக்களுக்கு இந்த வீட்டுரிமைப் பிரச்சினைப் பற்றி தெளிவூட்டவும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகமும் சிவில் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
47 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago