Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். சதீஸ், ரஞ்சித் ராஜபக்ஷ
காபட் இடப்பட்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நோர்வூட்- பொகவந்தலாவை பிரதான வீதியை புனரமைத்த தருமாறு கோரி, பொகவந்தலாவை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
இன்று (20) காலை பொகவந்தலாவை- டியன்சின் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குறித்த வீதியூடாக சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்கள், ஓட்டோ சாரதிகள், வர்த்தகர்கள், தோட்டத் தொழிலாளர்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்திருந்தனர்.
ஒரு இலட்சம் கிலோமீற்றர் தூரத்தை காபட் இட்டு புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 15 கிலோமீற்றர் தூரமுடைய குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் இரண்டு வருடத்துக்கு முதல் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இந்த புனரமைப்பு பணிகளுக்காக பெக்கோ இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வீதி விரிவுப்படுத்தப்பட்டதால், அப்பிரதேசத்தில் பெய்த கடும் மழையை அடுத்து, விரிவுப்படுத்தப்பட்ட பகுதிகள் குன்றும் குழியுமாக மாறியுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பில் நோர்வூட் வீதி அதிகாரசபையின் அதிகாரியிடம் வினவியேபோது, வீதியின் புனரமைப்பு பணிகளுடன் 4 கிலோமீற்றர் வரை வரை காபட் இடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது குறித்த வீதி அபிவிருத்திக்குத் தேவையான எரிபொருள் தமது அலுவலகத்துக்கு கிடைத்து வருவதாகவும் அதற்கமைய, வீதி புனரமைப்பு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர், சேதமடைந்துள்ள பகுதிகள், குழிகள் என்பவற்றை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago