2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வீதியை விட்டு விலகிய கார் விபத்து

R.Tharaniya   / 2025 மே 11 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெல்லம்பிட்டிய விலிருந்துநுவரெலியா நோக்கி சென்ற கார்ஒன்று பாதையை விட்டு விலகிபள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது என வட்டவளை தலைமைப் பொலிஸ் பரிசோதகர்சந்தன கமகே தெரிவித்துள்ளார்.

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் வட்டவளைகரோலினா எஸ்டேட் பகுதியில்  ஞாயிற்றுக்கிழமை (11) அன்று இந்தவிபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த 03 பயணிகள்வட்டவளை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துநேர்ந்த காரில் தாய், தந்தை, மகள் மற்றும்மகளின் இரண்டு குழந்தைகள் பயணம்செய்ததாகவும், விபத்தில் இரண்டு குழந்தைகளுக்கு காயம்ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் காரைமகள் செலுத்தியதாகவும், எதிர் திசையில் இருந்துவந்த பேருந்துக்கு வழிவிட முயன்ற போது, ஓட்டுநரின்கட்டுப்பாட்டை இழந்த கார் சுமார்20 அடி பள்ளத்தில் விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித் ராஜபக்ஷ


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X