Editorial / 2018 செப்டெம்பர் 14 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
பதுளை துல்கொல்லே பகுதியில், பாரிய கல்லொன்றை சட்டவிரோதமான முறையில் வெடி வைத்து அகற்ற முறப்பட்டக் குற்றச்சாட்டில் இருவரை, பண்டாரவளைப் பொலிஸார், நேற்று முன்தினம் மாலை கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை மற்றும் கோமாரிககொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரையே பொலிஸார் இவ்வாறுக் கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது வெடிபொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .