Editorial / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
இலங்கையின், ‘குட்டி லண்டன்’ என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால், நுவரெலியா நகரம், வெறிச்சோடி கிடப்பதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இந்த முறை, பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன், கண்டியில் இடம்பெற்ற வன்முறையின் காரணமாகவே, இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், இம்முறை நுவரெலியாவிற்கு வருகைத் தரும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 40 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிக்கு செல்வதைத் தவிர்த்திருப்பதால், அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், நுவரெலியா நகரம், பூங்காக்கள், வெறிச்சோடியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025