2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

வெற்றி பாதையில் வட்டவலை தோட்டம்

எஸ்.சதிஸ்   / 2020 மே 13 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 நெருக்கடி காரணமாக, தலவாக்க – வட்டவலை தோட்ட மக்களுக்கு, ஆறு தடவைகள் நிவாரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தொழிலாளர்களின் மாதாந்தச் சம்பளத்தில், 1,000 ரூபாயை மாத்திரமே நிர்வாகம் அறவிடுவதாக தெரிவிக்கபடுகின்றது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள, வட்டகொட தோட்ட
சிரேஸ்ட முகாமையாளர் துஷங்க ஜயதிலக்க,

பெப்ரவரி மாதம் முதலே, தங்களது தோட்ட மக்களை பாதுகாக்கும நடவடிக்கைகளை தங்களது நிர்வாகம் முன்னெடுத்து வருவதாகவும் மார்ச் மாத ஆரம்பத்தில், பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதை அறிந்து, 28 இலட்சம் ரூபாய்க்கு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை கொண்டு வந்து தயார் படுத்திக்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இவை அனைத்தும், மக்களுக்கு ஆறு தடவைகள் படிப்படியாக விநியோகிக்கப்பட்டது என்றும் இதன்மூலம், மக்கள் நகர்புறங்களுக்குச் சென்று கூட்டமாக இருப்பதைத் தவிர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் திட்டத்தில், தானும் தோட்ட உத்தியோகத்தர்களும் பங்குபற்றியதாகவும் அத்துடன், தோட்டத்தில் தொழில் செய்யாமல் இருக்கும் இளைஞர், யுவதிகளையும் இணைத்துக்கொண்டு, பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, தோட்ட நிர்வாகம், தோட்டத் தொழிலளார்களுக்கு இடையே, வாட்ஸ்ஆப் குழுவொன்றை பராமரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

நகர்ப்புறங்களில் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டமையால், தோட்டப் பகுதியில் 2,000க்கும் அதிகமான முகக்கவசங்களை உற்பத்தி செய்து, விநியோகித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .