2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன்

நோட்டன்பிரிட்ஜ், கொத்தலென வீதி, மக்கரதொரண பகுதியிலுள்ள பஸ்தரிப்பிடத்திலிருந்து, ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ஏழு வெற்றுத் தோட்டாக்களை, நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார், இன்று(25) காலை மீட்டுள்ளனர்.

மேற்படி பகுதியில் பஸ்ஸுக்காக காத்திருந்த ஒருவர், அவ்விடத்தில் சந்தேகத்துக்கு இடமாகக் கிடந்த பொலித்தீன் பையை பார்த்துள்ளதுடன், அதில் தோட்டாக்கள் இருந்ததைக் கண்டு, உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், தோட்டாக்களை மீட்டுள்ளதுடன், “ஜொனி” என்றழைக்கப்படும் மோப்ப நாயின் உதவியுடன், தேடுல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .