Editorial / 2020 ஜனவரி 03 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}



எம்.ஏ.எம்.ஹசனார்
அண்மையில் மலையகத்தில் பெய்த அடைமழை காரணமாக, வெலிமடை நகரிலுள்ள ஏழு வர்த்தக நிலையங்கள் தாழிறங்கியுள்ளன என்றும் இதனால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் தெரியவருகிறது.
பதுளை - வெலிமடை வீதி, உமாஓயா ஆற்றுப்படுக்கைக்கும் பிரதான வீதிக்கும் இடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தொகுதியில், பதுளை - பண்டாரவளை பஸ் நிறுத்தும் நிலையத்துக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்களே, இவ்வாறு தாழிறங்கியுள்ளன.
இது குறித்து வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இந்நகருக்குக் குடிநீரை விநியோகிக்கும் நீர்க் குழாய்கள், தமது கடைத் தொகுதிக்குக் கீழால் செல்வதால் அடைமழை காரணமாக அவற்றில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு அதிக நீர் வெளியேறியது என்றும் இதனால், வீதியின் ஒரு பகுதி தாழிறங்கி வர்த்தக நிலையமும் தாழ் இறங்கியுள்ளதாகவும் உரிய நேரத்தில் நீர்வழங்கல் அதிகார சபையினர் நீரை முற்றாகத் தடை செய்ததில் பாரிய இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் தொடர்ந்தும் இந்த வர்த்தக நிலையங்களில் வர்த்தக நடவடிக்கையை முன்னெடுக்க அச்சமாகவுள்ளதாகவும் இவற்றுக்கு நியாயமான தீர்வொன்றை, அரசும் பிரதேச செயலகமும் பெற்றுத்தர வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.
12 minute ago
31 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
31 minute ago
47 minute ago