Editorial / 2020 மார்ச் 17 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணத்திலக்க
மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், வெளிநாடுகளிலிருந்து வந்து தங்கியிருப்பவர்கள், உடனடியாக பொலிஸ் நிலையத்துக்கு வருகைத் தந்து தங்களது விவரங்களை அறித்தருமாறு, பொலிஸ் பரிசோதகர் இந்திக கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியா, இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து, பெப்ரவரி 29ஆம் திகதிக்குப் பிறகு நாடு திரும்பியவர்கள், பொலிஸ் நிலையங்களில் தங்களை பதிவு செய்துகொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .