Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஜூலை 27 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, எல்ல பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியின் சாரதியை, வெல்லவாய பொலிஸார், புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளனர்.
எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர், தனது கணவருடன், எல்ல பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார். எல்ல பகுதியிலுள்ள சுற்றுலா விடுத்திக்கு செல்வதற்காக குறித்த பெண், தனது கணவருடன் முச்சக்கர வண்டியொன்றில் ஏறியுள்ளார்.
மேற்படி இருவரையும் அழைத்துக்கொண்டு சிறிது தூரம் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதி, முச்சக்கர வண்டியில் இயந்திர்க கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, குறித்த பெணிண் கணவரை வண்டியிலிருந்து கீழே இறக்கியுள்ளார். இதனையடுத்து, முச்சக்கர வண்டியில் இருந்த பெண்ணை கடத்திச் சென்ற அவர், அப்பெண்ணை வன்புணர்வுக்கு உட்டுப்பத்த முயன்றுள்ளார்.
அந்நபரின் பிடியிலிருந்து தப்பி வந்த அப்பெண், பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேக நபரை வெல்லவாயவில் வைத்து கைது செய்துள்ளனர்.
50 minute ago
54 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
54 minute ago
6 hours ago