Janu / 2025 மார்ச் 09 , பி.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (09) காலை இதல்கஸ்ஹின்ன சுரங்கத்தில் வைத்து ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
35 வயது சீனப் பெண் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்து ஹப்புத்தளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ரயிலில் இருந்து தலையை வெளியே விட்டு, தொங்கிக்கொண்டு பயணித்துள்ளதுடன் அங்கு 19 வது ரயில் சுரங்கத்தில் தலை மோதியதால் ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.அவரின் தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன் ரயிலில் கொண்டு செல்லப்பட்டு 1990 ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
49 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago