Kogilavani / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
ஹட்டன் பஸ்தரிப்பிடத்தில் வெளியாரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தனியார் பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாகாண போக்குவரத்து அதிகார சபைக்கு உட்பட்ட ஹட்டன் பொது பஸ் தரிபிடத்தில், மிக நீண்டகாலமாக இப்பிரச்சினை இருந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பஸ் தரிப்பிட்டத்தில் வெளியாரின் வாகனங்கள் நிறுத்தப்படும்போது அதை ஒதுக்குமாறு நடத்துநர் அல்ல சாரதிகள் கூறும்பட்சத்தில் முறுகல் நிலை ஏற்படுவதாகவும் இன்றும் இவ்வாறானதொறு சம்பவம் இடைப்பெற்றதாகவும் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனங்களை அப்புறப்படுத்துமாறு தனியார் பஸ் நிலைய நேர கண்காணிப்பாளர்களுக்கு அறிவித்தபோது இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என சாரதிகளும் நடத்துநர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்
தொடர்ச்சியாக விக்டன், டெம்பஸ்டோ, ஹைய்ட்ரி, வட்டவளை, அந்தோனிமலை பகுதியில் சேவையில் ஈடுபடுபவர்களே இவ்வாறு தொடர்ச்சியாக அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹட்டன் தனியார் பஸ் சாரதிகளும் நடத்துநர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago