R.Tharaniya / 2025 ஏப்ரல் 23 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியாவில் இன்று (23) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட் லோட்ஜ் சந்தியில் புதிய வீதி முழுவதும் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் பெருக்கெடுத்ததாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர் .
குறிப்பாக நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறிகளும் அழிவடைந்துள்ளன.
எனவே நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.



14 minute ago
21 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
21 minute ago
43 minute ago