செ.தி.பெருமாள் / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தில் அறவிடப்படும் சகல கட்டணங்களும் அந்தந்தப் பிரிவுகளுக்கு முறையாகச் சென்றடைவதில்லை என, பெருந்தோட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கோவில் நிர்மாணப் பணிகள், மரண நிதி, கோவில் பூஜைகள், மின் பட்டியல், வங்கிக் கடன் இவை அனைத்தும், முறையாகச் சென்றடைவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளியின் வேதனத்தில் அறவிடப்படவுள்ள அனைத்துக் கட்டணங்களையும் கம்பனி நிர்வாகம் அறவிட்டு, அந்தத் தொகையை, தோட்ட முகாமைத்துவத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் ஆனால், தோட்ட முகாமைத்துவதற்கு இந்தத் தொகை முறையாக வந்து சேர்வதில்லை என்றும் தோட்டத் தொழிலாளிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் என்பவை கூட, சரியான முறையில் அனுப்பி வைக்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago