2025 மே 13, செவ்வாய்க்கிழமை

வேலுயோகராஜ் உள்ளிட்ட 14 பேருக்கு சரீரப்பிணை

Gavitha   / 2020 ஒக்டோபர் 14 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நானு-ஓயா, ​ரதெல்ல குறுக்கு வீதியிலுள்ள கட்டடமொன்றில் அத்துமீறி நுழைந்தார்கள் என்று குற்றஞ்சாட்டபட்டிருந்த நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட 14 பேரையும், சரீரப்பிணையில் செல்வதற்கு, நுவரெலியா நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத ஜயசேகர, இன்று (14) அனுமதி வழங்கினார்.

இது தொடர்புடைய வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, இந்த 14 பேரையும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கினார்.

தனது கட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் என்று கூறி, அக்கட்டடத்தின் உரிமையாளர் , நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் உள்ளிட்ட 18 பேருக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்புடைய வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.இராஜதுரை, பிரதிவாதிகளை பிணையில் செல்ல அனுமதி வழங்குமாறு கோரினார்.

இதன் பின்னரே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கடுமையான நிபந்தனைகளுடன் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கினார்.

இந்நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய, நீதிமன்றத்தில் இன்று ஆஜராகாத நால்வரும் அடுத்த விசாரணையின் போது ஆஜராகுமாறும் இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X