2026 மே 07, வியாழக்கிழமை

வைத்தியசாலைகளின் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

உமாமகேஸ்வரி   / 2020 மார்ச் 16 , பி.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், இரத்தினபுரி, எஹெலியகொடை நகரை அண்மித்த  நீரேந்துப் பகுதிகளில் ஆங்காங்கே வீசி எறிப்பட்டுள்ளதால், சுற்றுச் சூழலுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பிரதேச மக்களும் சூழலியலாளர்களும் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்டும்  சிறிஞ்சி, பாவிக்கப்பட்ட கையுறைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன்  பொருள்களே இப்பகுதிகளில் வீசப்பட்டுள்ளன.

இந்தக் கழிவுப் பொருள்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையிலிருந்து அகற்றப்பட்ட சில லேபல்களும் காணப்படுவதால், இக்கழிவுப் பொருள்கள் அனைத்தும் மாத்தறை பொதுவைத்தியசாலைக்கு உரியதாகவிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் இவ்வேளையில், இவ்வாறான  கழிவுப்பொருள்களை வீசி எறிவது ஏற்புடையதல்ல என்று, பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .