Editorial / 2020 பெப்ரவரி 16 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
கொத்மலை பிரதேசபைக்குட்பட்ட பூண்டுலோயா ஆரம்பப் பிரிவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால், வைத்தியசாலை தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையை, 16 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் திடீரென விபத்துகள் இடம்பெற்றாலும், தற்போது சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு இங்கு வைத்தியசாலை இல்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கர்ப்பிணித் தாயர்மாரும் மாதாந்தப் பரிசோதனைகளுக்கா வரும் நோயாளர்களும் இதனால் பல சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் இதனால், அனைவரும் கொத்மலை ஆதார வைத்தியசாலைக்கோ நுவரெலியா வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எனவே, உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி, இந்த வைத்தியசாலையை மீண்டும் திறப்பதற்கு வழி செய்யவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago