2026 மே 09, சனிக்கிழமை

dd

வைத்தியரைத் தாக்கிய இருவருக்கு விளக்கமறியல்

எம். செல்வராஜா   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை அரசினர் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவரைத் தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சாரதி, நடத்துநர் ஆகிய இருவரையும், 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, பண்டாரவளை நீதவான் நீதமன்ற நீதவான், நேற்று (29) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி வைத்தியர், ஹப்புத்தளை - தங்கமலை பெருந்தோட்ட பிரதேச அரச வைத்தியசாலைக்கு தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்த்திசையில் வந்த தனியார் பஸ்ஸின் சாரதி, பஸ்சை நிறுத்திவிட்டு மேற்படி வைத்தியரை தாக்கியதாக தெரியவருகிறது.

போக்குவரத்தில் ஏற்பட்ட பிரச்சினையே, இதற்கு காரணம் என்று தெரியவருகிறது.

இதுவிடயம் ஹப்புத்தளைப் பொலிஸாருக்கு தெரியவரவே, பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து  வைத்தியரை மீட்டுள்ளதுடன், தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்துடள்ளனர். அத்துடன் வைத்தியரைத் தாக்கிய தனியார் பஸ்ஸின் சாரதி, நடத்துநரையும் கைதுசெய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர், மேற்படி இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .