2025 ஜூலை 07, திங்கட்கிழமை

வைத்தியர்களை நியமிக்குமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

“மாரதென்ன பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள் இருவர், இடமாற்றம் பெற்றுச்சென்றுள்ளதால், தற்போது வைத்தியர்கள் எவரும் சேவையிலின்றி, வைத்தியசாலைகளின் சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதென”, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனால், வைத்தியசாலைக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள், பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனரென்றும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர், ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேராவுக்கு அனுப்பியுள்ள அவசர தொலைநகலில் மேலும் கூறியுள்ளதாவது,

“பொதுமக்களின் நன்மைக்கருதி மாரதென்ன வைத்தியசாலை, பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதுடன், இரு வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு, மிகச் சிறப்பான சேவையும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

எனினும், இங்குக் கடமையாற்றி வந்த இரு வைத்தியர்களும் இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளதால், பிரதேச வைத்தியசாலை முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர்களை நியமித்து மக்களுக்கான வைத்திய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, வினயமுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று அந்த தொலைநகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .