Janu / 2024 செப்டெம்பர் 03 , பி.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை (03) மதிய உணவு இடைவேளையின் போது வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது .
ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் வைத்தியசாலை காரியாலயத்தில் கேட்ப்போர் கூட மண்டபத்தில் ஏற்பாட்டு செய்திருந்ததுடன் இதன்போது கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்க நுவரெலியா கிளையின் வைத்தியர்கள் கூறுகையில்,
“ நமது நாட்டிலிருந்து விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்களின் சங்கம் தெரிவித்துள்ளனர் இதற்கு பிரதான காரணம் தற்போதைய அரசாங்கமே இதுவரை வைத்தியர்கள் எதிர் நோக்கும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் ஒன்றுமே நிறைவேற்றப்பட வில்லை அத்துடன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முறையற்ற வைத்தியர்களின் இடமாற்றம் வழங்குவதை நிறுத்த வேண்டும் வாழ்வாதாரத்துக்கு ஏற்ற ஊதியங்களை அதிகரிக்க வேண்டும் வைத்தியசாலையில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் குறிப்பாக சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர்களை ஒடுக்கும் நோக்கில் அமுல்படுத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் இவ்வாறு ஏராளமான பிரச்சனைகள் உள்ளது கூறிக்கொண்டே போகலாம் எனினும் இனி வரும் நாட்களில் சரி தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சுகாதார அமைச்சினால் எந்தவொரு தீர்வும் கிடைக்காவிட்டால் நாடு பூராகவும் உள்ள வைத்தியசாலைகளில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி பணிப்புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் குதிப்போம் ” என தெரிவித்தனர்.
செ.திவாகரன்


12 minute ago
27 minute ago
28 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
28 minute ago
29 minute ago