Kogilavani / 2021 ஜனவரி 11 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில், வைத்தியர்கள் மூவர் உட்பட ஒன்பது பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு உடற்பரிசோதனைக்கு வந்த ஒருவக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து, வைத்தியர்கள் மூவர் உள்ளிட்ட 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹட்டனைச் சேர்ந்த நபரொருவர், சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை (8) கிளங்கன் வைத்தியசாலைக்கு வந்துள்ளார்.
மேற்படி நபரும் மற்றுமொருவரும் கண்டி வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டியூடாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கண்டி வைத்தியசாலையில் மேற்படி இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், ஹட்டனைச் சேர்ந்த நபருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து, அந்நபருடன் தொடர்பைப் பேணிய டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மூவர், தாதியர்கள் மூவர், ஊழியர்கள் மூவருமாக 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் தொற்றுக்குள்ளான நபரின் குடும்பத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
26 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago