2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

ஸ்ரீ பாத தேசிய கல்லூரிக்கு இராஜாங்க அமைச்சர் விஜயம்

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்,பா.திருஞானம்

ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரிக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் இன்று வெள்ளிக்கிழமை  காலை 11 மணியளவில்  தீடீர் விஜத்தை மேற்கொண்டார்.

பயிற்சியிலீடுபடும் மாணவர்களுக்கு வழங்கும் உணவு சுத்தமற்ற, தரமற்ற நிலையில் காணப்படுவதாகவும் நிர்வாகம் தொடர்பிலும் பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையிலே இராஜாங்கஅமைச்சர்  விஜயத்தை மேற்கொண்டார்.

கல்லூரிக்கு சென்ற இராஜாங்கஅமைச்சர், கல்லூரி வளாகத்தின் சூழல் மாசடைந்த நிலையில் காணப்படுவதை சுட்டிக்காட்டியதுடன், அங்கு நடைபெறும் அபிவிருத்தி வேலைதிட்டங்களையும் திட்டமிட்டு செயற்படுத்துமாறும்  நடைபெற்றுகொண்டிருக்கும் அபிவிருத்தி வேலைகளை தற்காலிகமாக  நிறுத்துமாறும் நன்கு திட்டமிட்டபின் மீண்டும் ஆரம்பிக்குமாறும்  உத்தரவிட்டார்.

அத்துடன், மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்களுக்கான உணவு வழங்கும் விடயத்தில் நிர்வாகம் அசமந்த போக்கை கடைபிடிப்பதை சுட்டி காட்டிய இராஜாங்க அமைச்சர், சமையலறையிலும் சுத்தம் பேணப்படாமையையும் சுட்டிகாட்டினால் இவ்வாறான தவறுகள் நிர்வாகத்தினரின் குறைபாடுகளினால் ஏற்படுவதாகவும் இன்று இனம்காணப்பட்ட அனைத்து குறைபாடுகளையும் விரையில் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும்  நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .