Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுவதைக் கேட்டுக்கொண்டு கல்வியமைச்சை வழிநடத்திச் சென்றால், தமிழ், சிங்கள மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பின்னடைவு ஏற்படும் என, ஊவா மாகாண கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
ஊவா மாகாணத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில், சில பாடங்களுக்கு, தமிழ் மொழி தெரியாத சிங்கள ஆசிரியர்கள் கடமையாற்றிவரும் நிலையில், அவர்களை இடமாற்றம் செய்வதற்கு, ஊவா மாகாண கல்வியமைச்சர் செந்தில் தொண்டமான் மேற்கொண்டுள்ள நடவடிக்கை, பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என, இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அவருடை கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாக, நேற்று (06) தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,
ஆசிரியர் நேர்முகத் தேர்வுகளின் போது, தமிழ் பாடசாலைகளுக்கு, சிங்கள மொழி பாடசாலைகளுக்கு என்றே, தனித்தனியாக விண்ணப்பங்கள் கோரப்படுவதாகவும் அவ்வாறே, நேர்முகப்பரீட்சைகளும் நடத்தப்படுவதாகவும் கூறிய அவர், எனினும், ஆசிரியர்களாக நியமனம் பெற்றுக்கொண்ட பின்னர், தத்தமது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு, நியமனங்களைப் பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
தமிழ் பாடசாலைகளில், சிங்கள மொழி கற்பிக்கும் சிங்கள ஆசிரியர்களை மாற்றவேண்டும் என்று தான் கூறவில்லை என்றும் ஆனால், ஆங்கிலம், ஆரம்பப் பிரிவுகளில், தமிழ் மொழி தெரியாத சிங்கள ஆசிரியர்களாக உள்ளவர்களையே இடமாற்றம் செய்யவேண்டும் என்று தான் கூறியதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக, மாணவர்கள் கற்றல் ரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுப்பதாக, பெற்றோர்களிடமிருந்து தனக்கு முறைப்பாடு கிடைத்தமைக்கு அமையவே, தான் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இதற்கு வேறேதும் மாற்று முறைமையை, ஜோசப் ஸ்டாலின் பரிந்துரைத்தால், அதைப் பின்தொடரத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
19 வருடங்களுக்குப் பின்னர், 11 மாணவர்கள், ஊவா மாகாணத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ளனர் என்றும் இந்த வருடம் 25 மாணவர்களை, ஊவாவிலிருந்து விஞ்ஞானப் பீடத்துக்கு அனுப்புவதே தனது இலக்கு என்றும் கூறிய அவர், இந்த இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டி ருக்கும்போது, ஏதேனும் நல்ல அபிப்பிராயங்கள் இருந்தால், தெரிவிக்கலாம் என்றும் அவர் கோரினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago