Freelancer / 2023 மார்ச் 21 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் முதலாவது ஆண்டு நிறைவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும், ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் தலைவி திருமதி அகிலா கையிலை நாதன் தலைமையில், டிக்கோயா அபுசாலி மண்டபத்தில், நேற்று முன்தினம் (19) நடைபெற்றது.
இதன்போது கடந்தாண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
அத்தோடு, ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் ஊடாக தையல் வகுப்புகளை நிறைவு செய்த ஹட்டன், மஸ்கெலியா, பொகவந்தலாவ - பெற்றோசோ மற்றும் செல்வகந்த பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களுக்கு சான்றிதல்களும் வழங்கப்பட்டன.
மேலும், ஸ்ரீ சிகரம் அறக்கட்டளையின் தலைவி திருமதி அகிலா கையிலை நாதன், பணிப்பாளர்கள், இணைப்பாளர்களும் பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டதோடு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மதகுருக்கள், சிரேஷ்ட சட்டத்தரணி திருச்செல்வம், கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் அகிலன், ஹட்டன் மக்கள் பிரிவின் சூழல் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி சுந்தரராஜன், ஆசிரியர் ஆலோசகர்கள், அதிபர்கள், ஸ்ரீ சிகரம் அரக்கட்டளையின் பணிப்பாளர்களான ரமேஸ்குமார், கலாராணி, ஆலோசகர் தமேயந்தி, திட்ட இணைப்பாளர்களான கணேசன், இளையராஜா, திருச்செல்வம் விஜயகாந், சிவகுமார், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.



44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago