2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

’’ஸ்ரீ தலதா யாத்திரை’’ கால பாதுகாப்பும் போக்குவரத்தும்

Janu   / 2025 ஏப்ரல் 17 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை  வௌ்ளிக்கிழமை (18) மாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அன்று மாலை 5.30 மணி வரைக்கும். அதன் பின்னர்  சனிக்கிழமை (19) முதல் ஞாயிற்றுக்கிழமை (27) வரை பகல் 12.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் நடைபெறும்.

தலதா மாளிகை யாத்திரைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் 20 இலட்சத்திற்கும் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க வருகைத் தர இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஆதலால் இக் காலப்பகுதியில் ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின் பாதுகாப்பு, பக்தர்களின் பாதுகாப்பிற்காக இலங்கை பொலிஸாரால் விசேடப் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய பொதுமக்களை சோதனையிடுதல், பொதுப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, வீதிப் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்துவதுடன், மேலும் பொலிஸ் உயர் பதவிநிலை உத்தியோகத்தர்கள் 35 பேர் கண்காணிப்பின் கீழ், பொலிஸ் உத்தியோகத்தர்கள் 10000 இற்கும் அதிகமானோர் கடமையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா யாத்திரைக்காக பக்தர்கள் வருகைத் தரும் வாகனங்கள் கண்டி நகருக்குள் வருகைத் தரும் போது நகரத்தினுள் தேவையற்ற வாகன நெரிசல்கள் ஏற்படுவதால், அதன் நெரிசல்களை குறைக்கும் வகையில் 17.04.2025 ஆதி தினத்திலிருந்து வாகனங்களை நகரத்திற்குள் செல்வதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா யாத்திரைக்காக வாகனங்களில் வருகைத் தரும் பக்தர்கள் பின்வரும் இடங்களில் நிறுத்திவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பக்தர்களின் வசதிகளுக்காக வாகளங்களை நிறுத்திவைக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து பொது போக்குவரத்துச் சேவையினூடாக சலுகையுடன் கூடிய பணம் அறவிடப்பட்டு தலதா மாளிகை வரை போக்குவரத்துச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கம்பளை மற்றும் கொழும்பிலிருந்து வருகைத் தரும் வாகனங்களை கெட்டம்பே சந்தியில் நிறுத்திவைத்து அவ் வாகனங்களை கெட்டம்பே வினையாட்டு மைதானம் மற்றும் கன்னொருவ வீதியில் நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் கட்டுகஸ்தோட்டை வீதியினூடாக வருகைத்தரும் வாகனங்கள் 04 ஆவது கட்டை அருகில் நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ தலதா யாத்திரை நடாத்தப்படும் காலப் பகுதிகளில் பின்வரும் இடங்களில் வீதித் தடைகள் போடப்பட்டுள்ளது.

* வில்லியம் கோப்பல்லாவ மாவத்தை ஹிரஸ்ஸகல சந்தி.

சிறிமாவோ பண்டாரநாயக மாவத்தை கெட்டம்பே விளையாட்டு மைதானம் வாயில் அருகாமையில்,

மஹயியான் வேவெல்பிட்டிய விளையாட்டு மைதானம் அருகில்

* லேவெல்ல பாலம்

தென்னகும்புர வீதித் தடை

கட்டுகஸ்நோட்டை பாலத்தின் அருகாமையில்

கடுகன்னாவை வீதித் தடை

தொடம்வல பாலத்தின் அருகாமையில்

ஹந்தாளை வீதி IFS நிறுவனத்தின் அருகில்

* பொல்கொல்ல வேல்ல அருகில்

போத்தலாபிட்டிய வீதித் தடை

பலகடுவ வீதித் தடை

நிகன சந்தி

ஸ்ரீ நலதா யாத்திரைக்காக பக்தர்கள் வருகைத் தரும் போது வெள்ளை நிற ஆடைகள் அணிந்து வருமாறும், அதிகலவிலான பயணப் பொதிகள், கேமராக்கள், வீடியோ உபகரணங்கள் மற்றும் வேறு மின் உபகாணங்களை தலதா மாளிகையினுள் எடுத்துச் செல்வதை தவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையின் போது வருகைத் தரும் பக்தர்களின் பாதுகாப்பு  போக்குவரத்து கட்டுப்பாட்டுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவிக்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் பொலிஸ் மோட நாய்கள் பிரிவு, இலங்கை முப்படையினர், கடற்படை மற்றும் விமானப் படையினர்கள் இல கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X