2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹெரோயினுடன் ஒன்பது பேர் கைது

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்

ஹட்டன்- குடாகமையில், ஹெரோயின் விற்பனையாளர்கள் மற்றும் பாவனையாளர்கள்  ஒன்பது பேரை கைதுசெய்துள்ள ஹட்டன் மதுவரித் திணைக்கள அதிகாரிகள், அவர்களிடமிருந்து, 645 மில்லிகிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி பகுதியில், திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போதே, மேற்படி ஒன்பது பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஹெரோயின் விற்பனையாளர்களனெவும்,  5 பேர் ஹெரோயின் பாவனையாளர்களனெவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .