Editorial / 2019 மார்ச் 07 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}


ஆ.ரமேஸ், டி.சந்ரு
நுவரெலியா, ஹக்கல தாவரவியல் பூங்காவுக்கு அருகில், இன்று (07) காலை 10.30 மணிமுதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஹக்கல பூங்காவுக்கு அருகில் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் 42 கடைகளின் உரிமையாளர்கள், தாவரவியல் பூங்காவின் நடத்துநர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பூங்காவை பார்வையிட வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகளை, பூங்காவுக்குள் நுழைய விடாது பூங்காவின் நுழை வாயிலை மூடி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது வியாபார நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில், பூங்கா நிர்வாகம் தான்தோன்றித் தனமாக செயற்பட்டு வருவதாகக் கூறியே, ஆர்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago