2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹட்டன் வருகிறார் மோடி

Menaka Mookandi   / 2017 ஏப்ரல் 06 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ஆ.கோகிலவாணி

மே மாதம் 11 ஆம் திகதியன்று, இலங்கைக்கு விஜயம் ​செய்யும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஹட்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை 12 ஆம் திகதி காலை 10 மணியளவில் திறந்து வைப்பார்.
அத்துடன், தமிழ் முற்போக்குக் கூட்டணி, டிக்கோயாவில் ஒழுங்கு செய்துள்ள கூட்டத்திலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தொடர்பிலான ஏற்பாடுகளை செய்வதற்கான குழுவொன்றை அமைப்பதற்கு, கூட்டணியின் மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் அ.லோரன்ஸ் தெரிவித்தார்.

கூட்டணியின் மத்தியக் குழுக் கூட்டம், அதன் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில், அமைச்சரின் அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்கு கூட்டணயின் அழைப்பின் பேரில் , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோயாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனவே, அவரை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளை முழுமையாக செய்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கான குழுவொன்றை அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை மேதின கூட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. ஆரம்பத்தில், கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான அமைப்புகளான ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன, மே தினக் கூட்டத்தை மூன்று பிரதேசங்களில் தனித்தனியாக நடத்துவதற்கே தீர்மானித்திருந்தன. ஆனால், இதனை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பிலும் கூட்டணி ஆராய்ந்து வருகின்றது.

இதேவேளை, கூட்டணியை அரசியல் கட்சியாக பதிவுசெய்வதற்குரிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .