2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு

Freelancer   / 2023 நவம்பர் 03 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தேயிலை தோட்டத்தில் ஆண்ணொருவரின் சடலம் வௌ்ளிக்கிழமை  (03) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் செனன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 49) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஹட்டன் டிப்போவில் தொழிலாளியாக பணியாற்றியவர் எனவும் நான்கு நாட்களாக வேலைக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா - கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் வைக்கப்பட்டுள்ளது. M 

ரஞ்சித் ராஜபக்ஷ ,  எஸ் கௌசல்யா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X