Editorial / 2019 டிசெம்பர் 11 , பி.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}


ரஞ்சித் ராஜபக்ஷ
இலங்கையில் உள்ள ரயில் நிலையங்களிலேயே அழுக்கானதும் செயலற்றதுமான ரயில் நிலையமாக, ஹட்டன் ரயில் நிலையம் காணப்படுவதாக, பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவென்று ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.
பசுமையான ரயில் நிலையத்தை அமைப்பதே தனது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஹட்டன் ரயில் நிலையத்துக்கு, கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ரயில் டிக்கட்டுகள், ஓட்டோ சாரதிகளால் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பிலான முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்றும் அரச சொத்துகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதன் கீழ், ஓட்டோ சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
ரயில் டிக்கட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக, ஈ-டிக்கட், ஈ- சீசன் முறையை வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஹட்டன் ரயில் நிலையத்தில் வாகனத் தரிப்பிடம், ஓய்வு அறைகள் அமைப்பது தொடர்பில், ஹட்டன்- டிக்கோயா, அம்பகமுவ பிரதேச சபை, ஹட்டன் பிரதேச வர்த்தக சமூகங்களிடம் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள், பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்றும் இதன்மூலம் மக்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் அனைத்து ரயில் நிலையங்களுக்கும், தான் நேரடியாக விஜயம் செய்து, அவற்றைக் கண்காணிக்க உள்ளதாகவும் அத்துடன், ரயில் நிலையங்கள், நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளதுடன், ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை மீளாய்வு செய்யக் குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தக் குழுவின் சிபாரிசுகளுக்கமைய, வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாகத் தெரிவித்த அவர், ரயில் சேவை மூலம் மக்களுக்குத் திருப்திகரமான சேவையை வழங்குவதே, அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago