Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Gavitha / 2020 நவம்பர் 05 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், எஸ் சதீஸ்
மஸ்கெலியா, ப்ரௌண்லோ தோட்டத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற சமய நிகழ்வில் பங்கேற்ற இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது, நே்று (04) மாலை உறுதி செய்யப்பட்டது.
மஸ்கெலியா, ப்ரௌண்லோ தோட்டத்தில் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களிடம், கடந்த 2ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் நேற்று (04) வெளியான நிலையிலேயே, இருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில், கிங்கோரா பிரிவைச் சேர்ந்த 58 வயதுடைய பெண்ணொருவருக்கும் ப்ரௌண்லோ தோட்டத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஆணொருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மஸ்கெலியா, பிரவுன்லோ தோட்டத்திலுள்ள பேலியகொடை மீன் சந்தையில் பணிபுரிந்த நபரொருவரின் வீட்டில், கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற சமய நிகழ்வில் இவர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மஸ்கெலியவில் 7ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, ஹட்டனில், மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இவர், அவராக முன்வந்து, இது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த 2ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னர், இவருக்கு தொற்று நேற்று (04) உறுதி செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago