2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஹட்டனில் கட்டடமொன்றை இடித்து அகற்ற உத்தரவு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 07 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் எம்.ஆர் பகுதியிலுள்ள  தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான நான்கு மாடி கட்டடம் இடிந்து விழும் நிலைக்கு வந்துள்ளதாக  நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

கடந்த மாதம் ஹட்டன் பிரதேசத்தில் பெய்த கடும் மழையினால் குறித்த கட்டடம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டதால், அக் கட்டடத்தில்  வசிப்பவர்களை அங்கிருந்து செல்லுமாறு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனமும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகமைத்துவ நிலையமும்  அறிவுறுத்தியது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும்  மழையுடன் குறித்த  கட்டடத்திற்கு அருகில் ஹட்டன் காமினிபுர பகுதிக்குச்  செல்லும் பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு ஹட்டன்- டிக்கோயா  நகர சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போதைய நிலையின் கீழ், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைய, அடிப்படையில் நான்கு மாடி கட்டடத்தை இடித்து அகற்றுமாறு ஹட்டன் டிக்கோயா நகர சபைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X