R.Maheshwary / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரிலுள்ள 3 வர்த்தக நிலையங்கள் இன்று (28) அதிகாலை உடைத்து, அங்கிருந்த பணம் உள்ளிட்ட பொருள்களைத் திருடிய சந்தேகநபர், பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகரிலுள்ள கட்டட பொருள்கள் விற்பனை நிலையம், ஆடை வர்த்தக நிலையம் மற்றும் தொலைபேசி வர்த்தக நிலையம் என்பற்றை இன்று அதிகாலை 2 மணியிலிருந்து 4.30 மணி வரை உடைத்து பொருள்களைத் திருடியுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் வர்த்தக நிலையங்களுக்குள் நுழைந்ததை அவதானித்த தனியார் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர், சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலைய பணியாளர்கள், அயலவர்கள் இணைந்து சந்தேகநபரைப் பிடித்து ஹட்டன் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு- சப்புகஸ்கந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு, ஹட்டன் நகரில் விற்பனை நடவடிக்கைகள் அதிகம் இடம்பெறுவதால், திருட்டில் ஈடுபடும் நோக்கில் ஹட்டன் நகருக்கு வருகைத் தந்த்தாகவும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
2 hours ago