2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஹட்டனில் தீபாவளி கைவரிசை: 4 யுவதிகள் கைது

Editorial   / 2024 ஒக்டோபர் 30 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நாளை (31) வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஹட்டனுக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள், நுகர்வோர்களிடம் இருந்து பணப்பைகள் மற்றும் தங்க நகைகளை திருடிய நான்கு யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் நான்கு யுவதிகள் செவ்வாய்க்கிழமை (29) பிற்பகல் ஹட்டன் பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகருக்கு   அதிகளவான வாடிக்கையாளர்கள் வருகை தந்திருந்த நிலையில், சில வாடிக்கையாளர்களின் பணப்பைகள் மற்றும் தங்க ஆபரணங்கள் காணாமல் போனதாக ஹட்டன் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஹட்டன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஹட்டன் நகருக்கு வரும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்திருந்ததுடன், அதன் ஊடாக சிவில் உடையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பேரில் வாடிக்கையாளரின் கழுத்தில் நகையை உடைக்க முற்பட்ட   பெண்ணை கைதுசெய்துள்ளதுடன் ஏனைய சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

நான்கு யுவதிகளையும் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட போது சந்தேகநபர்கள் வசம் இரண்டு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய் பணமும் சில தங்க ஆபரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21-26 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் வென்னப்புவ மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும், சந்தேகநபர்கள் நாட்டின்  பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இவ்வாறான திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது சந்தேக நபர்களை மீட்பதற்காக ஹட்டன் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தொலைபேசி அழைப்புகள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (30) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X